முகப்புப்பக்கம் | எங்களை தொடர்புகொள்ள | உயர் இரத்த அழுத்தம் உள்ள‌ மக்கள் | நீரிழிவு நோய் உள்ள மக்கள்
Crusade to save your kidney  
டாக்டர். ராஜன் ரவிச்சந்திரன் புகழ்பெற்ற சிறுநீரக மருத்துவர்
டாக்டர். ராஜன் ரவிச்சந்திரன்

கூறுகிறார் "நீரிழிவு நோயும் (டயாபிடிஸ்) உயர் இரத்த அழுத்தமும் (ஹைபர்டென்ஷன்), உங்களுக்கு நாட்பட்ட சிறுநீரக நோய் (CKD) ஏற்படுவதற்கு வழிவகுக்கலாம்" >>
முகப்புப் பக்கம் > உயர் இரத்த அழுத்தம் (ஹைபர்டென்ஷன்) உள்ள மக்கள் >> சிறுநீரகத்தின் வடிவமைப்பு
சிறுநீரகத்தின் வடிவமைப்பு என்ன?

சிறுநீரகங்கள், விலா எலும்புகளுக்கும் இடுப்புக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள, ஒவ்வொன்றும் ஏறத்தாழ 150 கிராம் எடையுள்ள இரண்டு அவரை வடிவ உறுப்புகள்.
Structure of Kidney Structure of Kidney
ஒவ்வொரு சிறுநீரகமும், சிறுநீரக நுண்குழல்கள் என அழைக்கப்படுகின்ற ஏறத்தாழ 1 மில்லியன் மைக்ரோபிராசஸர் யூனிட்களால் ஆக்கப்பட்டுள்ளது.
Nephrons

இதயத்திலிருந்து ஒரு நிமிட நேரத்தில் வெளியேற்றப்படுகின்ற இரத்தத்தின் ஏறத்தாழ 25% அளவை (அதாவது, தோராயமாக 1.25 லிட்டர்) சிறுநீரகங்கள் பெறுகின்றன. ஏறத்தாழ 180 லிட்டர் திரவமானது சிறுநீரக நுண்குழல்களால் வடிக்கப்பட்டு, தோராயமாக 1.5 லிட்டர் மட்டுமே சிறுநீராக வெளியேறுகிறது. எஞ்சிய அனைத்தும் சிறுநீரக நுண்குழல்களில் மறுசெயலாக்கப்பட்டு மீண்டும் உறிஞ்சப்படுகின்றன. சிறுநீரகத்தில் இருந்து வெளியேறுகின்ற சிறுநீரானது, சிறுநீர்ப்பை என அழைக்கப்படுகின்ற கொள்கலனிற்கு சிறுநீர்க்குழாயால் எடுத்துச்செல்லப்படுகிறது. சிறுநீர்ப்பை விரிவடந்தவுடன், சிறுநீர் கழிப்பதற்கான தூண்டுதல் ஏற்பட்டு, சுற்றுச்சூழல் அனுமதிக்கும் பட்சத்தில், சிறுநீர் கழிப்பதை தொடங்குவதற்கான கட்டளையை மூளை பிறப்பிக்கிறது. பொதுவாக, சிறுநீர் நுண்குழாய்களின் வழியாக புரதம் / ஆல்புமின் வடிகட்டப்படுவதில்லை. எனவே சிறுநீரில் புரதம் / ஆல்புமின் காணப்படுவதானது, சிறுநீர் நுண்குழாய்களின் முற்பட்ட பாதிப்பை குறிப்பிடும்.

கூடுதல் தகவல்கள்

   
   
Advertise here..