புகழ்பெற்ற சிறுநீரக மருத்துவர்
டாக்டர். ராஜன் ரவிச்சந்திரன்
கூறுகிறார்
"நீரிழிவு நோயும் (டயாபிடிஸ்) உயர் இரத்த அழுத்தமும் (ஹைபர்டென்ஷன்), உங்களுக்கு நாட்பட்ட சிறுநீரக நோய் (CKD) ஏற்படுவதற்கு வழிவகுக்கலாம்" >>
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் ஆகிய இரண்டும் மிக முக்கிய காரணங்கள். ஒவ்வாமை கோளாறுகள், மருந்துகள், அடர் உலோகங்கள், மரபு நோய்கள் போன்றவை மற்ற காரணங்களாகும். நீரிழிவும் உயர் இரத்த அழுத்தமும் மிக முக்கிய காரணங்களாக இருப்பதால், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயாளிகள் எல்லோரும் குறைந்தது வருடத்திற்கு ஒரு முறையாவது ஆல்புமின் அளவை கண்டறிய சிறுநீர் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.