முகப்புப்பக்கம் | எங்களை தொடர்புகொள்ள | உயர் இரத்த அழுத்தம் உள்ள‌ மக்கள் | நீரிழிவு நோய் உள்ள மக்கள்
உங்களுடைய சிறுநீரகத்தை காப்பாற்றுவதற்கான இயக்கம்  
டாக்டர். ராஜன் ரவிச்சந்திரன் புகழ்பெற்ற சிறுநீரக மருத்துவர்
டாக்டர். ராஜன் ரவிச்சந்திரன்

கூறுகிறார் "நீரிழிவு நோயும் (டயாபிடிஸ்) உயர் இரத்த அழுத்தமும் (ஹைபர்டென்ஷன்), உங்களுக்கு நாட்பட்ட சிறுநீரக நோய் (CKD) ஏற்படுவதற்கு வழிவகுக்கலாம்" >>
முகப்புப்பக்கம் > நீரிழிவு நோய் (டயாபிடிஸ்) உள்ள மக்கள் >> நீரிழிவை கட்டுப்படுத்துவதற்கான பயனுள்ள குறிப்புகள்
நீரிழிவை கட்டுப்படுத்துவதற்கான பயனுள்ள குறிப்புகள்

சர்க்கரையை வீட்டிலேயே கண்காணித்தல்

மயிர்த்துளைக்குழாய் (கபிலரி) இரத்த சர்க்கரையை வீட்டிலேயே சோதிப்பதற்கு எளிய சாதனங்கள் கிடைக்கப்பெறுகின்றன. அடிக்கடி கண்காணித்தலால், நீரிழிவு நோயை கனிவாய் கட்டுப்படுத்துவதற்கு உதவமுடியும்.

உணவுமுறை

சர்க்கரை போன்ற பெருமளவில் சுத்திகரிக்கப்பட்ட‌ உணவை (உயர் இரத்த சர்க்கரை அளவு கொண்ட உணவுகள்) தவிர்ப்பது நீரிழிவு நோயாளிக்கு மிகவும் முக்கியமானது, ஏனெனில், இதனால் அதிவிரைவான உறிஞ்சலையும் இரத்த சர்க்கரை அதிகரித்தலையும் விளைவிக்கமுடியும். எனவே, உணவு முறையானது கூடுமானவரை இயற்கை சார்ந்ததாக இருப்பது அவசியமானது. உடல் எடை கட்டுப்பாடிலேயே இருக்கும் வகையில், அதிகமாய் சாப்பிடுவது தவிர்க்கப்படவேண்டும். அனுகூலமான அளவிற்கு அருகில் உடல் எடையை கொண்டுவருவது மிகவும் முக்கியமானது. தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள், பால், பால் பொருட்கள் போன்றவை உள்ளடங்கிய சமச்சீர் உணவு முறையே போதுமானது.

உடற்பயிற்சி

உடற்பயிற்சிகள் அனைத்து முறைகளுமே, சர்க்கரைக் கட்டுப்பாட்டை மேம்படுத்துகிறது. இது, இன்சுலினின் கூறுணர்வை அதிகரிக்கிறது. உடல் எடை குறையவில்லை எனும் ஆர்வக் குறைவால் ஒருபோதும் உடற்பயிற்சியை நிறுத்தக்கூடாது.

மருந்துகள்

அனைத்து மருந்து சிகிச்சைகளுக்கும், மருத்துவரின் கீழான முறையான கண்காணிப்பு தேவைப்படுகிறது.
இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கின்ற (கிப்லென்க்லாமைட், க்ளைபிஸைட் போன்றவை) அல்லது இன்சுலின் கூறுணர்வை அதிகரிக்கின்ற (க்ளிடஸோன்ஸ்) அல்லது சர்க்கரையின் பயன்பாட்டை அதிகரிக்கின்ற (மெட்ஃபார்மின்) அல்லது குடல்களில் இருந்து சர்க்கரை உறிஞ்சலை குறைக்கின்ற (அகர்போஸ்) பல்வேறு வகையான மருந்துகள் கிடைக்கப்பெறுகின்றன. இன்சுலினே, பல்வேறு வடிவங்களில் கிடைக்கப்பெறுகிறது. இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கின்ற மருந்துகள், பெரும்பாலும் உடல் எடை அதிகரிப்பை விளைவிக்கின்றன. மருந்துகள் யாவும், உடல் எடை அதிகரிப்பதையோ அல்லது குறைப்பதையோ ஏற்படுத்தலாம். மருந்தின் வகையானது, உரிய முறையில் மருத்துவரால் தீர்மானிக்கப்படவேண்டும். இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருந்தாலும் கூட, மருத்துவருடன் கலந்தாலோசிக்காமல் மருந்துகள் எடுத்துக்கொள்வதை நிறுத்தவேண்டாம்.

கூடுதல் தகவல்கள்

இங்கே விளம்பரப்படுத்தவும்..