முகப்புப்பக்கம் | எங்களை தொடர்புகொள்ள | உயர் இரத்த அழுத்தம் உள்ள‌ மக்கள் | நீரிழிவு நோய் உள்ள மக்கள்
உங்களுடைய சிறுநீரகத்தை காப்பாற்றுவதற்கான இயக்கம்  
டாக்டர். ராஜன் ரவிச்சந்திரன் புகழ்பெற்ற சிறுநீரக மருத்துவர்
டாக்டர். ராஜன் ரவிச்சந்திரன்

கூறுகிறார் "நீரிழிவு நோயும் (டயாபிடிஸ்) உயர் இரத்த அழுத்தமும் (ஹைபர்டென்ஷன்), உங்களுக்கு நாட்பட்ட சிறுநீரக நோய் (CKD) ஏற்படுவதற்கு வழிவகுக்கலாம்" >>
முகப்புப்பக்கம் > புகழ்பெற்ற சிறுநீரக மருத்துவர் டாக்டர். ராஜன் ரவிச்சந்திரன்

நாட்பட்ட சிறுநீரக நோய்க்கு எதிரான இயக்கம்
டாக்டர். ராஜன் ரவிச்சந்திரன்
எம்டி, எம்என்ஏஎம்எஸ், எஃப்ஆர்சிஎஸ் (எடின்), எஃப்ஏசிபி (யூஎஸ்ஏ)
,

இயக்குனர்,
எம்ஐஓடி சிறுநீரகவியல் மையம் எம்ஐஓடி மருத்துவமனைகள்,
சென்னை-89.
தலைவர்,
சேபியன்ஸ் ஹெல்த் ஃபவுண்டேஷன்
எண். 7/23, 3வது மெயின் ரோடு, கோட்டூர் கார்டன்ஸ்,
சென்னை - 85

டாக்டர். ராஜன் ரவிச்சந்திரன், பம்பாய் பல்கலைக்கழகத்தில் ஏராளமான பரிசுகளையும் தங்கப் பதங்களையும் வென்று மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் மிகச்சிறந்த பட்டம் பெற்ற பிறகு, 1985-ல் சென்னையில் தனது பணியை தொட‌ங்கினார். அடையாரில் உள்ள வாலண்டரி ஹெல்த் சர்வீசஸில் 1985 முதல் 1989 வரை சிறுநீரகவியல் துறையின் தலைவராக இருந்தார். அனைத்து நோயாளிகளுக்கும் இலவசமாக சிகிச்சையளிக்கப்பட்டது. இவரது வழிகாட்டுதலின் கீழ், துறையின் வசதி வாய்ப்புகள் விரிவாக்கப்பட்டதுடன், இலவச சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைத் திட்டம் தொடங்கப்பட்டது. இது, மஹாபலிபுரத்திலும் அதைச் சுற்றிலுமுள்ள ஏராளமான நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக இருந்தது. 1989-ல், சென்னையிலுள்ள விஜயா ஹெல்த் செண்டரில், மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் நெப்ராலஜி-யை இவர் தொட‌ங்கினார். நாடு முழுவதிலுமிருந்து மட்டுமல்லாமல், மாலத்தீவு, இலங்கை, பங்களாதேஷ் போன்ற அண்டை நாடுகளையும் சேர்ந்த, சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த 20,000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இந்நிறுவனத்தில் சிகிச்சையளிக்கப்பட்டது. 1000-க்கும் மேற்பட்ட சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் 1000-1500 இதய இரத்த தூய்மையாக்கல் செய்யப்படுவதுடன், 25 % நோயாளிகளுக்கு இலவச ஆலோசனைகளும் மருத்துவ அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன. 1993-ல் மேற்பட்டப் படிப்புத் திட்டம் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, ஏராளமான மருத்துவ பட்டதாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பணியாற்றிக்கொண்டுள்ளனர். இவர் 1997-ல், டோக்கியோ பெண்கள் மருத்துவக் கல்லூரியில் வருகைதரு பேராசிரியராக நியமிக்கப்பட்டார். ஏழை நோயாளிகளுக்கு பெரியளவில் உதவி செய்வதற்காக, 1997-ல், பாலாஜி மருத்துவ மற்றும் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது. நோயாளிகளிடமிருந்தும் மற்ற நலன்–விரும்பிகளிடமிருந்தும் நிதி திரட்டப்பட்டு, ஏராளமான மானியத்தின் கீழான இரத்த தூய்மையாக்கல் மேற்கொள்ளப்படுகின்றன. மருந்துகள் யாவும் இலவசமாக வழங்கப்படுகிறது. சிறுநீரக நோய் தொடர்பாக வருமுன் காப்பதே மிகமுக்கிய அம்சமாக இருப்பதால், இலவச மருத்துவ முகாம்களும், விழிப்புணர்வு பிரச்சாரங்களும் தொடர்ந்து வழக்கமாக நடத்தப்படுகின்றன. சமீபத்தில் 15 மார்ச் 2009-ல், பாலாஜி ட்ராஸ்டின் 12வது ஆண்டு விழா நிகழ்ச்சியின் போது, “ஏர்லி டிசீஸ் புரோக்ராம்” (EDP) என பெயரிடப்பட்ட திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சிறுநீரக நோயை முன்கூட்டியே கண்டறிதல், தலையிடுதல், கண்காணித்தல் போன்றவற்றிற்காக முதலாவதாய் ஏராளமான மக்களுக்கு EDP பாதுகாப்பளிக்கிறது. இச்செய்தியை பரப்புவதற்காக, கிடைக்கப்பெறுகின்ற அச்சு, தொலைக்காட்சி, இண்டர்நெட், திரைப்படங்கள், மற்ற ஊடகங்கள் போன்ற அனைத்தும் விரிவான முறையில் பயன்படுத்தப்படும்.

மே 2008-ல் இவருக்கு FACP (USA) பட்டம் வழங்கப்பட்டது. ஜூன் 2008-ல் இவருக்கு FRCP (EDIN) பட்டம் வழங்கப்பட்டது. சிறுநீரக நோயுடனான நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கென்று பிரத்யேக 100 படுக்கை வசதிகொண்ட MIOT சிறுநீரகவியல் மருத்துவமனையை ஜூலை 2008-ல் இவர் தொடங்கினார். இவர், ஏராளமான தேசிய மற்றும் சர்வதேச பிரசுரங்களில் பங்கு கொண்டுள்ளார்.

1996 முதல், ஐஐடி சென்னை-யுடன் இவர் செயல்படு ஒத்துழைப்பைக் கொண்டுள்ளார். 1997-ல் அக்யூட் டயாலிசிஸ் சாதனம் உருவாக்கப்பட்டது. இச்சாதனம், நுரையீரல் நீர்க்கோர்வைக்கான சிகிச்சையளித்து நீரை அகற்றுவதற்கு ஆபத்தான நிலையிலுள்ள நோயாளிகளுக்கு உபயோகிக்கப்படுகிறது. இச்சாதனம், நீர் உள்ளீடு எதுவும் தேவைப்படாத ஓர் நவீன செயல்திட்டம். இது கையடக்கமாக இருப்பதுடன், இதை வெவ்வேறு இடங்களுக்கு மிக எளிதாக எடுத்துச்செல்லலாம். இது பயனர்-நட்பாக இருப்பதுடன், சாதனத்தை இயக்குவதற்காக சிறுநீரக மருத்துவரின் வழிகாட்டுதல் எதுவும் தேவையில்லை. சாதனத்தை இயக்குவதற்கு, ஐசியூ செவிலியரை பயிற்றுவிக்கலாம். இச்சாதனம் செலவு குறைந்ததாகவும் இருப்பதுடன், நுரையீரல் நீர்க்கோர்வையுடன் அபாயகர நிலையிலுள்ள நோயாளிகளை திடப்படுத்துவதற்காக சிறிய நர்சிங் ஹோம்கள் உட்பட நாடெங்கிலும் இதை உபயோகிக்கலாம். இச்சாதனம், சென்னையிலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் வெற்றிகரமாக உபயோகிக்கப்பட்டுள்ளது. தற்போது, இச்சாதனம் வணிகரீதியாக உருவாக்கப்படுவதுடன், நாடெங்கெலும் கிடைக்கப்பெறுகிறது.

வேறு பல ஆராய்ச்சித் திட்டங்களும் கூட ஐஐடி சென்னையுடன் ஒருங்கிணைந்து தொடங்கப்பட்டன. அதில், பாலியல்லிலமைன் பாஸ்பேட் பைண்டர் மிக வெற்றிகரமான ஒன்றாக இருந்தது. இது, நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடத்தில் பாஸ்பரசை அகற்றுவதற்காக வாய்வழியாக உபயோகிக்கப்படுகின்ற ரெசினை உள்ளடக்கிய கால்சியமற்ற ஒன்று. இது, இந்நோயாளிகளிடத்தில் இதய நோய் நிகழ்வுகளின் எண்ணிக்கையை குறைக்கும். இந்த மருந்து ஆய்வகத்திலிருந்து மருந்து தொழிற்துறைக்கு கொண்டு செல்லப்பட்டு, நாடெங்கிலும் வெற்றிகரமாக உபயோகிக்கப்பட்டு லட்சக்கணக்கான நோயாளிகளுக்கு பலனளிக்கிறது. வாய்வழி ரெசின் எனும் இச்செயல் திட்டமானது, உடலிலிருந்து வேறு பல பொருட்களை அகற்றுவதற்கேற்ப தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இங்கே விளம்பரப்படுத்தவும்..