முகப்புப்பக்கம் | எங்களை தொடர்புகொள்ள | உயர் இரத்த அழுத்தம் உள்ள‌ மக்கள் | நீரிழிவு நோய் உள்ள மக்கள்
உங்களுடைய சிறுநீரகத்தை காப்பாற்றுவதற்கான இயக்கம்  
டாக்டர். ராஜன் ரவிச்சந்திரன் புகழ்பெற்ற சிறுநீரக மருத்துவர்
டாக்டர். ராஜன் ரவிச்சந்திரன்

கூறுகிறார் "நீரிழிவு நோயும் (டயாபிடிஸ்) உயர் இரத்த அழுத்தமும் (ஹைபர்டென்ஷன்), உங்களுக்கு நாட்பட்ட சிறுநீரக நோய் (CKD) ஏற்படுவதற்கு வழிவகுக்கலாம்" >>
முகப்புப்பக்கம் > நீர் அருந்துதல்
எவ்வளவு தண்ணீர் குடிப்பது?

தண்ணீரை அளந்து குடிப்பது அவசியமல்ல. நீர் அருந்துவதானது, தாகம், நாகரிக பழக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அதிகளவு மாறுபடலாம். உடலின் மூன்றில் இரண்டு பங்கு எடை, நீரால் நிரம்பியுள்ளது. சவ்வூடுபரவல் செயலின் அடிப்படையில் புற மற்றும் அக செல் அறைகளுக்கு இடையில் தடையின்றி ஊடுறுவிச் செல்கிறது. உடலில் செல்கின்ற நீரானது, நாம் குடிக்கின்ற நீர் மற்றும் உணவின் வளர்சிதை மாற்றத்தால் உருவாக்கப்படுகின்ற நீர் ஆகியவை உட்பட திரவங்களின் மொத்தம். உடலிலிருந்து நீர் வெளியேறுதலானது, வியர்வை, சிறுநீர், மலம் போன்றவற்றின் வாயிலாக நடைபெறுகிறது. இது பொதுவாக, மூளையாலும் சிறுநீரகங்களாலும் நேர்த்தியாய் சமச்சீராக்கப்படுகின்றன. மூளையில் சவ்வூடுபரவல் அமைப்பு அல்லது ஓஸ்மோஸ்டாட் உள்ளது, இது இரத்தத்தின் சக்தியளித்தலை (செறிவு) உணர்வதுடன், மூளையிலுள்ள தாக அமைப்பை ஊக்குவிக்கின்ற மற்றும் சிறுநீரில் நீர் இழப்பைக் குறைக்கின்ற சிறுநீர்த்தடுப்பி இயக்குநீரை (ADH) உருவாக்குகிறது. இதனால் தான், உடலில் பல்வேறு நீர் உட்செல்லல் இருந்தபோதிலும், நீரின் கலவை மாறாமல் நிலையாக இருக்கிறது.

நாளொன்றுக்கு 500 மிலி அளவிற்கு குறைவாக சிறுநீர் வெளியாகும் வகையில் சிறுநீரகத்தால் அடர்வாக்க முடியும் அல்லது நாளொன்றுக்கு 10 லிட்டர் அளவிற்கு சிறுநீர் உருவாகும் வகையில் செறிவை குறைக்கச்செய்யமுடியும். பொதுவாக, நபர் தடங்கலின்றி நீர் எடுத்துக்கொண்டும் அவரது மூளை வழக்கமானதாகவும் இருக்கும் பட்சத்தில், நீர் வற்றுதல் என்பதற்கான சாத்தியம் கிடையாது. அதனால் தான், விலங்குகள் கணக்கிடுவதில்லை, ஆனால் தாகத்திற்கு ஏற்ப நீரருந்தி, ஆரோக்கியமாக வாழ்கிறது. ஆனாலும், தாக உணர்வின் சுட்டிக்காட்டலுக்கும் அதிகமான நீரை அருந்தும்போது, நமது உடலிலிருந்து அதிகப்படியான நீரை வெளியேற்றுக்கின்ற சிறுநீரகங்களின் திறனானது ஃப்ரீ வாட்டர் க்ளியரன்ஸ் என அழைக்கப்படுகிறது. எனவே சாதாரண மனிதரால் நாளொன்றுக்கு 10 லிட்டர் வரையில் நீரை வெளியேற்ற முடியக்கூடும். சிறுநீரக நோய், கல்லீரல் நோய், இதய நோய் போன்றவை இருத்தலும், சிறுநீர் இறக்கிகள் என அழைக்கப்படுகின்ற சிலவகையான மருந்துகளை எடுத்துக்கொள்வதும், ஃப்ரீ வாட்டர் க்ளியரன்ஸை பாதிக்கின்றன. உடலானது கூடுதல் நீரை தக்கவைத்துக்கொள்கிறது, இதை வீழ்ச்சியடைகின்ற ஊநீர் சோடியத்தை மதிப்பிடுவதன் மூலம் கண்டறியலாம். இது ஹைபொனட்ரேமியா (135 meq/lt-க்கு குறைவான ஊநீர் சோடியம்) என அழைக்கப்படுகிறது. இது மிகவும் அபாயகர நிலைமையாக இருக்கலாம். இறுதியாக, சரியான அளவு நீரை உட்கொள்வதற்கு நமக்கு வழிகாட்டுகின்ற மிகச்சிறந்த தாக அமைப்பை நமது உடல் கொண்டுள்ளது. ஆரோக்கியமாயுள்ள நபருக்கு, நீரை அளந்து குடிக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால், நீர் வெளியேற்றலில் பாதிப்படைந்துள்ள நோயாளிகளுக்கு நீர் அருந்தும் அளவில் கட்டுப்பாடு தேவைப்படக்கூடும்.

இங்கே விளம்பரப்படுத்தவும்..