சிறுநீர்ப்பாதை தொற்று (யூரினரி டிராக்ட் இன்பெக்க்ஷன்)
சிறுநீர்ப் பாதை தொற்று என்பது ஓர் பொதுவான பிரச்சனை. பெண்கள் தங்களின் ஆயுட்காலத்தில் இப்பிரச்சனையை எதிர்கொள்வதற்கான 50% வாய்ப்பு உள்ளது. இது மிகவும் தொல்லை தரக்கூடியதாகவும் சிலசமயங்களில் உயிருக்கே-அச்சுருத்தல் விளைவிப்பதாகவும் இருக்கலாம். குறுகிய சிறுநீர்ப் பாதை(யுரெத்ரா), பாலுறவுச் செயலின் போது நிகழ்கின்ற காயம் போன்றவற்றின் காரணமாய் பெண்களுக்கு சிறுநீர்ப் பாதை தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகப் பொதுவானதாக உள்ளது. சிறுநீர்ப் பாதை தொற்றைப் பற்றி, சாதாரண மக்களிடத்திலும் அநேக மருத்துவர்களிடத்திலும் பல்வேறு தவறான அபிப்ராயங்கள் உள்ளன. உயிர்ப்பொருட்கள் மூலமான சிறுநீர்ப் பாதையின் குடியேற்றமே சிறுநீர்ப் பாதை தொற்று என அழைக்கப்படுகிறது. சிறுநீர்ப் பாதையானது, சிறுநீரகத்தில் ஓர் சேகரிப்பு அமைப்பு, யுரேட்டர் (சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பைக்கு செல்லும் குழாய்), சிறுநீர்ப்பை, கடைசியாக யுரெத்ரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சிறுநீரகங்களும் யுரேட்டரும் இணைந்து மேல் சிறுநீர்ப் பாதையை உருவாக்குகின்றன. சிறுநீர்ப்பையும் யுரெத்ராவும் கீழ் சிறுநீர்ப் பாதையை உருவாக்குகின்றன. சிறுநீர்ப் பாதையானது, அது வாயு மண்டலத்திற்கு வெளிப்படுத்தப்படுகின்ற இறுதிப் பகுதி வரையிலும் எந்தவொரு உயிர்ப்பொருளாலும் பயன்படுத்தப்பெறாததாக உள்ளது. உயிர்ப்பொருட்கள் யாவும் சிறுநீர்ப்பைக்கும் சிறுநீரகங்களுக்கும் மேலுயரும் போது தொற்றுகள் நிகழ்கின்றன. ஆண்களைப் பொருத்தவரை, பிறப்பிலிருந்து சிறுநீர்ப்பாதையில் வழக்கத்திற்கு மாறான நிலையின் காரணமாக பிறந்த முதல் வருடத்தில் அல்லது சிறுநீர்ப்பாதையை ஆண் இனப்பெருக்க உறுப்பு தடுக்கும் போது அறுபது வயதிற்குப் பிறகு சிறுநீர்த் தடத் தொற்று ஏற்படுகிறது. அதேசமயம், பாலியல் செயல்பாடுமிக்க காலத்தில், இது முக்கியமாய் பெண்களின் நோயாக இருக்கிறது.
சிறுநீர்ப் பாதை தொற்று ஏற்படுவதற்கான காரணங்கள்
சிறுநீர்ப் பாதை தொற்றானது, சமூகத்திலிருந்து-பெறப்படுபவையாகவோ சிறுநீர்ப் பாதையில் கருவிகளைக் கொண்டு அறுவை மருத்துவம் செய்வதன் (சிறுநீர்ப்பை சிலாகையேற்றல்) காரணமாக மருத்துவமனையிலிருந்து பெறப்படுபவையாகவோ இருக்கலாம். சமூகத்திலிருந்து-பெறப்படுகின்ற தொற்றுகள் யாவும் அடிப்படையில் நுண்மங்கள் சார்ந்ததாக உள்ளன, அதில் மிகவும் பொதுவான உயிர்ப்பொருளானது ஈ-கோலி என அழைக்கப்படுகிறது. மருத்துவமனையிலிருந்து பெறப்படுகின்ற தொற்றுகள் யாவும், தடுக்கவல்ல நுண்மங்கள் மற்றும் பூஞ்சைகளால் ஏற்படலாம்.
சிறுநீர்ப் பாதை தொற்றின் அறிகுறிகள்
வலிமிகு சிறுநீர்க் கழிப்பு (டிஸ்யூரியா), சிறுநீர் அடிக்கடி கழித்தல் போன்றவை சிறுநீர்ப் பாதை தொற்றுகளின் ஏற்கப்படுகின்ற அறிகுறிகள். இது, சிறுநீர்ப்பை மற்றும் யுரெத்ரா ஆகியவற்றின் எரிச்சலில் இருந்து வெளிப்படுகிறது. சிறுநீர்ப் பாதை தொற்றுகளை, இந்த அறிகுறிகள் இல்லாமல் பொதுவாக நோயறிதல் கூடாது. நிறமாற்றமும் தனிப்படுத்திலில் சிறுநீரில் இரத்தம் வெளியாதலும், அதாவது டிஸ்யூரியா இல்லாதது, சிறுநீர்ப் பாதை தொற்றுகளை குறிப்பிடுவதில்லை. மேல் சிறுநீர்ப்பாதைத் தொற்றில் காய்ச்சலும் இடுப்பு வலியும் நிகழ்கிறது. அடிவயிற்று வலியும் சிறுநீர் கழித்தலின் கால இடைவெளியுமே கீழ் சிறுநீர்ப் பாதை தொற்றின் அம்சங்கள். அறிகுறிகள் இல்லாத நிலையில், ஆய்வகத்தில் சிறுநீரில் உயிர்ப்பொருட்கள் வளர்ந்தால், அது அறிகுறியில்லா நுண்ணியிர்ச் சிறுநீர் என அழைக்கப்படுகிறது. இது ஓர் ஆய்வக சோதனையே, அரிய நிலைமைகளைத் தவிர இதற்கு சிகிச்சை தேவையில்லை. டிஸ்யூரியா அல்லது வலிமிகு சிறுநீர்கழிப்பானது, யுரெத்ராவிலான அழற்சி அல்லது காயத்தின் காரணமாக (சிறுநீர்க்குழாய் சார்ந்த நோய்க்குறி), சிறுநீர்ப் பாதை தொற்று இல்லாமல் நிகழலாம். எனவே, சிகிச்சை முறையை தீர்மானிப்பதற்கு, மேல் மற்றும் கீழ் சிறுநீர்ப் பாதை தொற்றிற்கும் சிறுநீர்க்குழாய் சார்ந்த நோய்க்குறிக்கும் இடையில் வேறுபாடு கண்டறிதல் முக்கியமானது.
நோய்க்கண்டறிதல்
சிறுநீர்க் கழிப்பின் கால இடைவெளி அதிகரிப்புடன் கூடிய டிஸ்யூரியாவின் திடீர் நிகழ்வானது கிட்டத்தட்ட சிறுநீர்ப் பாதை தொற்றின் நோய்க்குறியே என்பது அறிகுறிகளின் ரீதியில் தவிர்க்க இயலாதது. ஆய்வக சோதனை மட்டுமே அதை உறுதிசெய்து, மருந்தின் வகையை தீர்மானிக்க உதவுகிறது.
சிறுநீர் அறிக்கைகளின் விளக்கம்
சிறுநீரில் பஸ் (சீழ்) செல்கள் இருப்பதானது, சிறுநீர்ப் பாதையின் அழற்சியை குறிப்பிடுகிறது. இதற்கான மிகவும் பொதுவான காரணம், தொற்று ஆகும். ஆனாலும், கற்கள், கட்டிகள், சிறுநீரக அழற்சி ஆகிய அனைத்தும் சிறுநீரில் பஸ் செல்களை உருவாக்கலாம். சிறுநீரில் ஆல்புமின் இருப்பதானது, எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய சிறுநீர்ப் பாதை தொற்றின் அம்சம் அல்ல. இது பொதுவாக, சிறுநீரகங்களின் நோயை குறிப்பிடுகிறது. சிறுநீரில் எபிதெலியல் செல்கள் இருப்பதானது, சிறுநீர் மாதிரி சேகரிப்பின் போது நிகழ்கின்ற மாசுபடுதலை குறிப்பிடுகிறது. சேகரிப்பதற்கான மிகச்சிறந்த வழி என்னவெனில், அந்தரங்க பகுதியை தண்ணீரால் கழுவி பின்னர், வெளியாகும் சிறுநீரின் முதல் சில மிலி அளவை விட்டுவிட்டு அதைத் தொடர்கின்ற சிறுநீரை தூய்மையான/கிருமி நீக்கப்பட்ட கொள்கலனில் சேகரிக்கவேண்டும். இது மிட் ஸ்ட்ரீம் சேம்பிள் அல்லது கிளீன் கேட்ச் ஸ்பெசிமன் என அழைக்கப்படுகிறது.
அது உடனடியாக ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்படவேண்டும்.
சிறுநீர் வளர்சோதனை
இச்சோதனை, மோசமான சேகரிப்பின் காரணமாக பிழைகளுக்கு துணைசெல்கிறது. வளர்சோதனையின் முடிவைக் கொடுக்கும்போது, கொலோனி கவுண்ட் (நுண்மத் தொகுதி)-ஐ குறிப்பிடுவது முற்றிலும் அவசியமானது. கொலோனி கவுண்ட் ஒரு லட்சத்திற்க்கும் (105) மேலாக இருப்பது மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கொலோனி கவுண்ட் இல்லாத சிறுநீர் வளர்சோதனை முடிவுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும். பேக்டீரியாவின் வகைக்கு அப்பால், பாக்டீரிய-எதிர்ப்பு கூறுணர்வுடனான மருந்துகளின் பட்டியலை சிறுநீர் வளர்சோதனை கொண்டிருக்கவேண்டும். இது, சிகிச்சைக்கு கொடுக்கப்படவேண்டிய மருந்தினை தீர்மானிப்பதற்கு உதவும். குறைந்தபட்ச நச்சுத்தன்மை கொண்ட, சிலபிணி ஒழிப்புச் செயல், சிறந்த திசு ஊடுறுவல் போன்றவற்றுடனான மருந்து தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.
¬மற்ற ஆய்வுகள்
கீழே குறிப்பிடப்பட்டுள்ள சில நிலைமைகளின் போது அல்ட்ராசவுண்ட், எக்ஸ்-ரே, சைட்டோஸ்கோபி போன்ற விவரமான பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது:
- சிறுநீர்ப் பாதை தொற்றுடனான அனைத்து ஆண்கள்
- குழந்தைப்பருவத்திலுள்ள அல்லது அருபது வயதைத் தாண்டிய பெண்கள்
- திரும்பத்திரும்ப சிறுநீர்ப் பாதை தொற்றுகள் நிகழும் பட்சத்தில், பாலுறவு செயல்பாடுமிக்க பெண்கள்.
சிறுநீர்ப் பாதை தொற்றிற்கான சிகிச்சை
இது, சமூகத்திலிருந்து-பெறப்பட்டதா அல்லது மருத்துவமனையிலிருந்து-பெறப்பட்டதா, மேல் சிறுநீர்ப் பாதை தொற்றா அல்லது கீழ் சிறுநீர்ப் பாதை தொற்றா என்பதைச் சார்ந்தது. சமூகத்திலிருந்து பெறப்பட்ட கீழ் சிறுநீர்ப் பாதை தொற்றுகளுக்கு, ஒற்றை-மருந்தளவு ஆண்டிபயாடிக்ஸ் (எதிர்உயிர்மிகள்) உட்பட எளிய மருந்துகளைக் கொண்டு சிகிச்சையளிக்கலாம். ஆண்டிபயாடிக்ஸ் நீண்ட காலத்திற்கு கொடுக்கவேண்டிய தேவையுள்ள மற்ற தொற்றுகள்.
பாலுறவு செயல்பாடுமிக்க பெண்களிடத்தில் சிறுநீர்ப் பாதை தொற்று ஏற்படுவதை தடுத்தல்
- சிறந்த உடல் சுகாதாரத்தை பராமரித்தல் மற்றும் பாலுறவுச் செயலிற்குப் பிறகு சிறுநீர் கழித்தல்.
- பாலுறவுச் செயலிற்குப் பிறகு குறைந்த மருந்தளவு ஆண்டிபயாடிக் எடுத்துக்கொள்தல்.
- இரவு நேர குறைந்த-மருந்தளவு ஆண்டிபயாடிக் நீண்ட காலம் எடுத்துக்கொள்தல்.
சிறுநீர்ப் பாதை தொற்றில் தண்ணீரின் பங்கு
பெருமளவு தண்ணீர் குடிப்பதால் சிறுநீர்த் தட எரிச்சலை குறைக்கலாம். ஆனாலும், அது, ஆண்டிபயாடிக் உட்செலுத்திலின் வீரியத்தை குறைக்கவும் செய்யலாம்.
ஆல்கலைன் (காரப்பொருள்) கலவையின் பங்கு
ஆல்கலைன் கலவையும் கூட சிறுநீர் எரிச்சலை நோய்க்குறி சார்ந்து குணப்படுத்தலாம். ஆனாலும், இதனால் தொற்றுகளை முற்றிலும் ஒழித்துக்கட்டமுடியாது.
உணவுமுறை
உணவுமுறையில் அதிகளவு மாமிசப் புரதம் இருத்தலானது, அதிக அமிலத்தன்மை வாய்ந்த சிறுநீரை விளைவிக்கிறது. இது, சிறுநீர் கழிதலில் எரிச்சலை அதிகரிக்கலாம். காய்கறிகள் யாவும் சிறுநீரில் அமிலத்தன்மையை குறைத்து, அதை காரத்தன்மையுடையதாக ஆக்குகிறது.
முக்கியக்கூறுகள்
- சிறுநீர் தொற்று நோயாளியின் அறிகுறியினால் கண்டறியலாம். ஆய்வகம், உறுதிப்படுத்தலுக்கு மட்டுமே உபயோகிக்கப்படுகிறது. நோய்க்குறிகள் இல்லாத பட்சத்தில், பிரத்யேக நிலைமைகளைத் தவிர, சிறுநீர் தொற்றிற்கு சிகிச்சையளிக்கவேண்டாம்.
- ஆய்வக பரிசோதனைகள், பிழைகளுக்கு துணைபோகின்றன.
- மேல் மற்றும் கீழ் சிறுநீர்த் தடத் தொற்றுகளை வேறுபடுத்திக் காணவும்.
- பாலியல் செயல்பாடு மிக்க பெண்களைத் தவிர வேறு நபர்களை ஆய்வு செய்யவும்.
- எளிய முறைகளைக் கொண்டு சிறுநீர்த் தொற்றுகளை தடுக்கவும்.
|