விளக்கங்கள்
அதிகரிக்கும் கண்டுபிடிப்புகள் மற்றும் நோய் ஏற்படுவதில் உண்மையான அதிகரிப்பு எனும் இரு காரணங்களாலும் கடந்த பத்தாண்டுகளில் சிறுநீரக நோயின் நிகழ்வு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், உடற்பயிற்சியின்மை, மருந்துகளின் உபயோகம் போன்றவற்றின் அதிக நிகழ்வுகளே, நாம் காண்கின்ற இந்த சிறுநீரக நோய் அதிகரிப்பின் சாத்தியமான காரணங்களாக உள்ளன. சிறுநீரகத்தின் அடிப்படை செயல்களாவன :-
- உடலிலுள்ள ஒவ்வொரு அணுவும் உறுப்பும் முறையாக செயல்பட முடிகின்ற வகையில், pH, நீர் அளவு, மின்பகு பொருட்கள் போன்ற அகச்சூழலை பராமரித்தல். அதனால் தான், சிறுநீரகங்கள் நோயால் பாதிக்கப்பட்டால், அதன் அறிகுறிகளும் அடையாளங்களும் சிலநேரங்களில் வெவ்வேறு உறுப்புகளில் காணப்படுகின்றன.
- உடலில் இருந்து வளர்சிதை மாற்றம் மற்றும் மருந்து போன்றவற்றின் பல்வேறு கழிவுப் பொருட்களை வெளியேற்றுதல். இது, சிறுநீரக நோயாளிகளிடத்தில் ஏன் மருந்துகளை கவனமாக உபயோகிக்கவேண்டும் என்பதை விளக்குகின்ற மிக முக்கியமான செயல்.
- எலும்பு வளர்ச்சி (வைட்டமின்–D), எலும்பு மச்சை (எரித்ரோபொயிடின்) மூலமான இரத்த உற்பத்தி, இரத்த அழுத்தம் (ரெனின்) போன்றவற்றிற்கு காரணமாயிருக்கின்ற ஹார்மோன்களின் உற்பத்தி.
சிறுநீரக நோய்களின் வகைகள் – திடீர் செயலிழப்பு மற்றும் நாட்பட்டது
- திடீர் செயலிழப்பு - வாந்தி பேதி, மாரடைப்பு, இரத்த இழப்பு போன்ற நிலைமைகளின் காரணமாக ஏற்படுகின்ற நீர் வறட்சியைத் தொடர்ந்து நிகழ்கின்ற குறைவான இரத்த விநியோகத்தின் காரணமாக சிறுநீரக செயல்பாட்டில் திடீர் குறைவு ஏற்படுவதே இதன் பொருள். இருப்பினும், அடிப்படையான நோய் சரிசெய்யப்படாவிட்டால், நோயாளி இறக்கக்கூடும். மாறாக அடிப்படையான நோய் சரிசெய்யப்பட்டால் நோயாளி முழுமையாக குணமடைவதுடன், அவருக்கு தற்காலிக இரத்த சுத்திகரிப்பு மட்டுமே தேவைப்படக்கூடும்.
- நாட்பட்டது - நடுத்தர வயதில் அல்லது வயது முதிர்ந்த நிலையில் ஏற்படுகின்ற நீரிழிவு நோயே இதற்கான மிகமுக்கிய காரணம். உயர் இரத்த அழுத்தமும் கூட ஓர் முக்கிய காரணமாக இருப்பதுடன், நீரிழிவுடன் சேர்ந்து மோசமான விளைவை ஏற்படுத்தலாம். மேற்கூறிய இரு நிலைகளுமே, வருடங்கள் செல்லச்செல்ல மெதுவாக சிறுநீரகத்தை பாதிக்கின்றன.
சிறுநீரகத்தின் தொண்ணூறு சதவிகிதம் பாதிக்கப்படும் வரை உடலால் தானாகவே மாற்றியமைத்துக்கொள்ளமுடியும், எனவே நோயாளிகளிக்கு அறிகுறிகள் எதுவும் காணப்படுவதில்லை. ஆய்வகங்களில் சிறுநீரையும் இரத்தத்தையும் பரிசோதிப்பதன் மூலம் இது கண்டுபிடிக்கப்படுகிறது. ஆல்புமின் கசிதல் என்பது, சிறுநீரக சேதத்தின் ஆரம்பநிலை எச்சரிக்கை அறிகுறியாகும். அதைத் தொடர்ந்து, யூரியாவும் கிரேட்டினினும் இரத்தத்தில் உயர்ந்து, சிறுநீரக செயலிழப்பின் தீவரத்தன்மையை குறிப்பிடுகிறது. துரதிர்ஷடம் என்னவென்றால், இன்னமும் இந்நிலையில் தான் பெரும்பாலான நோயாளிகளுக்கு நோய் இருப்பது கண்டறியப்படுகிறது, சரிப்படுத்தும் செயல்களை மேற்கொள்ள முடிகின்ற நிலையான ஆல்புமின் கசிகின்ற ஆரம்ப நிலையில் கண்டறியப்படுவதில்லை. விழித்திரை நோயின் காரணமாக பார்வை குறைதல் என்பது, நீரிழிவு நோயாளியிடத்தில் நிகழத்தக்க சிறுநீரக பாதிப்பின் ஓர் முக்கியமான குறியீடாக உள்ளது.
வலி நிவாரணிகள், பெயரளவிலான டானிக்குகள், வேறு பல ஆய்வுசெய்யப்படாத மாற்றுப் பொருட்கள் அல்லது நாட்டு மருந்துத் தயாரிப்புகள் போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்வதன் அதிகரிப்பே நவீன வளர்ச்சியின் மற்றொரு சாபக்கேடு. நீண்ட நாள் எடுத்துக்கொள்ளும் பட்சத்தில், இந்த மருந்துகள் யாவும் சிறுநீரக பாதிப்பிற்கு சாதகமாயிருக்கின்றன. நோயாளிகள் பெரும்பாலும் அறிகுறியில்லாதவர்களாக இருப்பதையும், கவனமான ஆய்வக மதிப்பீட்டிற்குப் பிறகே சிறுநீரக நோய் கண்டறியப்படுகிறது என்பதையும் சொல்லத்தேவையில்லை.
|