புகழ்பெற்ற சிறுநீரக மருத்துவர்
டாக்டர். ராஜன் ரவிச்சந்திரன்
கூறுகிறார்
"நீரிழிவு நோயும் (டயாபிடிஸ்) உயர் இரத்த அழுத்தமும் (ஹைபர்டென்ஷன்), உங்களுக்கு நாட்பட்ட சிறுநீரக நோய் (CKD) ஏற்படுவதற்கு வழிவகுக்கலாம்" >>
அறிகுறிகள் இல்லாத நாட்பட்ட சிறுநீரக நோய் (CKD) ஏன்?
சிறுநீரகத்தில் ஏறத்தாழ 180 லிட்டர் நுண்வடிப்பு உருவாவதால், சிறுநீரகத்தில் நாட்பட்ட பாதிப்பு இருந்தபோதிலும் சிறுநீரின் அளவு வழக்கமாக வெளியேறுவதற்கான சாத்தியமுள்ளது. எனவே 90% சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்தாலும், வழக்கமான அளவு சிறுநீர் வெளியேறலாம். சிறுநீரக நோயானாது, நாட்பட்டதாக இருக்கும் போது, சிறுநீர் சார்ந்த அறிகுறிகளை அடிக்கடி உருவாக்குவதில்லை. நோய் நாட்பட்டதாக இருக்கும் போது, உடலும் அதற்கேற்ப மாற்றியமைகிறது.