முகப்புப்பக்கம் | எங்களை தொடர்புகொள்ள | உயர் இரத்த அழுத்தம் உள்ள‌ மக்கள் | நீரிழிவு நோய் உள்ள மக்கள்
Crusade to save your kidney  
டாக்டர். ராஜன் ரவிச்சந்திரன் புகழ்பெற்ற சிறுநீரக மருத்துவர்
டாக்டர். ராஜன் ரவிச்சந்திரன்

கூறுகிறார் "நீரிழிவு நோயும் (டயாபிடிஸ்) உயர் இரத்த அழுத்தமும் (ஹைபர்டென்ஷன்), உங்களுக்கு நாட்பட்ட சிறுநீரக நோய் (CKD) ஏற்படுவதற்கு வழிவகுக்கலாம்" >>
முகப்புப் பக்கம் > உயர் இரத்த அழுத்தம் (ஹைபர்டென்ஷன்) உள்ள மக்கள் >> சிறுநீரக செயல்பாடு
சிறுநீரகம் என்ன செய்கிறது?

இரத்தத்தை சுத்தம் செய்வதன் மூலம் உடலின் அகச்சூழலை பராமரிப்பதும், நீரையும் மின்பகு பொருட்களையும் பரமாரிப்பதுமே சிறுநீரகத்தின் முக்கியமான செயல். எனவே, சிறுநீரகங்கள் தொடர்பான நோய்க்கான அறிகுறிகளை உடலின் எப்பகுதியிலும் காணலாம்.

நாம் எடுத்துக்கொள்கின்ற உணவிலிருந்து உருவாகின்ற வளர்சிதைமாற்றப் பொருட்களை அகற்றுவது சிறுநீரகத்தின் இரண்டாவது செயல். நாம் உட்கொள்கின்ற மருந்துகள் அனைத்துமே சிறுநீரகத்தால் அகற்றப்படுகின்றன என்பது இதன் மற்றொரு துணைவிளைவு.

எரித்ரோபொயிடீன், வைட்டமின்-D, ரெனின் போன்ற ஹார்மோன் உற்பத்திகள் மற்ற செயல்களாகும். எரித்ரோபொயிடீன் என்பது இரத்த உற்பத்தியுடன் தொடர்புடையது, வைட்டமின் -D என்பது எலும்பு உருவாக்கத்திற்கும் எலும்பு வளர்ச்சிக்கும் சம்மந்தப்பட்டது, ரெனின் என்பது இரத்த அழுத்தம் தொடர்பானது.

கூடுதல் தகவல்கள்

Advertise here..