முகப்புப்பக்கம் | எங்களை தொடர்புகொள்ள | உயர் இரத்த அழுத்தம் உள்ள‌ மக்கள் | நீரிழிவு நோய் உள்ள மக்கள்
உங்களுடைய சிறுநீரகத்தை காப்பாற்றுவதற்கான இயக்கம்  
டாக்டர். ராஜன் ரவிச்சந்திரன் புகழ்பெற்ற சிறுநீரக மருத்துவர்
டாக்டர். ராஜன் ரவிச்சந்திரன்

கூறுகிறார் "நீரிழிவு நோயும் (டயாபிடிஸ்) உயர் இரத்த அழுத்தமும் (ஹைபர்டென்ஷன்), உங்களுக்கு நாட்பட்ட சிறுநீரக நோய் (CKD) ஏற்படுவதற்கு வழிவகுக்கலாம்" >>
முகப்புப்பக்கம் > 2011-ன் முக்கிய மருத்துவத் தகவல்கள்
2011-ன் முக்கியம்வாய்ந்த மருத்துவ விவரங்கள்
ஆலிவ் ஆயில், பக்கவாத அபாயக் குறைப்புடன் தொடர்புறுகிறது.   தூங்குவதற்கு முன், டிவியில் மூர்க்கத்தனமான நிகழ்ச்சிகளை பார்ப்பதானது குழந்தைகளின் தூக்கத்தை பாதிக்கிறது.

7600 ஆய்வுக்குட்படுனர்கள், 5 வருட காலத்திற்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர். அனைவருமே 55 வயதைத் தாண்டியவர்கள். ஆலிவ் ஆயில் உபயோகித்தவர்களுக்கு பக்கவாத பாதிப்பு 41% குறைந்திருந்தது.
மேற்கோள் -நியூராலஜி. ஜீன் 16 2007, ஃபிசிஸியன்ஸ் ஃபர்ஸ்ட் வாட்ச்.

இரவு 7 மணிக்குப் பிறகு டிவி, வீடியோ, கம்ப்யூட்டர் கேம்ஸ் போன்றவற்றைப் பார்த்த குழந்தைகள் அதிக உறக்கப் பிரச்சனைகளுக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டது.
மேற்கோள்- பீடியாட்ரிக் ஜர்னல் வாட்ச் – 28 ஜூன் 2011

காய்கறி நிறைந்த நார்ச்சத்து உணவானது, டைவெர்டிகுளர் நோய் (பெருங்குடல் நோய்)-க்கான அபாயத்தை குறைக்க உதவுகிறது.   புகை பிடிப்பது, சிறுநீர்ப்பை புற்றுடன் தொடர்புறுகிறது.

பிஎம்ஜே-வின் படி, 47000 ஆய்வுக்குட்படுனர்கள் 12 வருட காலத்திற்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர். மூன்றில் ஒரு பங்கினர் சைவ உணவு சாப்பிடுபவர்கள். சைவ உணவினரிடம், டைவெர்டிகுளர் நோயின் அபாயம் 30% குறைந்து காணப்பட்டது
மேற்கோள்- பிஎம்ஜே. ஜூலை 2011-343.

நடப்பில் புகை பிடித்தவர்களுக்கு 4 மடங்கும், முன்பு புகை பிடித்தவர்களுக்கு 2 மடங்கும் சிறுநீர்ப்பை புற்று அதிகமாக நிகழ்ந்தது. இது பெண்களுக்கும் நிகழ்கிறது, 50 முதல் 71 வயது வரையிலான 4,50,000 பெண்களிடத்தில் நிகழ்த்தப்பட்ட 10 ஆண்டுகால ஆய்வு இதைக் காட்டியுள்ளது.
மேற்கோள்- ஜேஏஎம்ஏ 2011 306(7).

அளவுக்கதிகமாக சிகப்பு மாமிசம் சாப்பிடுவதுடன், சிறுநீரக புற்றுநோய் சம்மந்தப்படுகிறது.   ஆன்மீகம், மனச்சோர்வைக் குறைக்கிறது. அது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

அளவுக்கதிகமாக சிகப்பு மாமிசம் சாப்பிட்ட ஆட்படுனர்களிடத்தில் காணப்பட்ட சிறுநீரகப் புற்று நோய்க்கு, சிகப்பு மாமிசம்தான் காரணமா அல்லது மைக்ரோவேவ் சமையல் காரணமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த ஆய்வுக்குட்படுனர்களிடத்தில், 19% அதிக நிகழ்வு காணப்பட்டது.
மேற்கோள்- அமெரிக்கன் ஜார்னல் ஆஃப் கிளினிகல் நியூட்ரிசன். 2011.

ஆன்மீகமானது, பெற்றோர் மற்றும் குழந்தைகள் என இருவரிடத்திலும் மனச்சோர்வைக் குறைக்கிறது என 10 ஆண்டுகால ஆய்வு காட்டியுள்ளது.
மேற்கோள்- ஜார்னல் வாட்ச் சைக்யாட்ரி. செப்டம்பர் 19 2011.

விட்-E, அதிகமான ஆண்மைச்சுரப்பிப் புற்றுநோயுடன் தொடர்புறுகிறது.   வாரத்திற்கு ஒருசில முறை மது அருந்துவதும் கூட, மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது.

விட்-E 400 IU எடுத்துக்கொண்ட ஆண்களுக்கு, ஆண்மைச்சுரப்பிப் புற்றுநோயின் நிகழ்வு 17% அதிகமாக இருந்தது.
மேற்கோள்: ஜேஏஎம்ஏ– 2011-306.

வாரத்திற்கு 3 முதல் 6 கோப்பை ஒயின் குடித்த பெண்களிடத்தில் மார்பகப் புற்றுநோய் உருவாகும் நிகழ்வு 15% அதிகமாக காணப்பட்டது.
மேற்கோள் – ஜேஏஎம்ஏ. 2011-306(17).

யோகாவும் உடலை நீட்டிமடக்கும் பயிற்சியும் முதுகு வலியை குறைப்பதில் சம ஆதாயத்தைக் கொண்டுள்ளன.   முதியவர்களிடத்தில்; மருந்து சாப்பிடுவதன் எதிர்மறை நிகழ்வானது (மருந்துகளின் பக்க விளைவுகள்), அடிக்கடி மருத்துவமனை செல்வதை விளைவிக்கிறது.

இரு சிகிச்சை முறைகளிலும், அறிகுறிகள் மற்றும் இயங்காற்றல் தொடர்பாய் நல்ல முன்னேற்றம் பல மாதங்களுக்கு காணப்பட்டது.
மேற்கோள்- அர்சீவ்ஸ் ஆஃப் இண்டர்னல் மெடிசின். தொகுதி. 171. டிசம்பர்-2011.

முதியவர்கள் மருத்துவமனையில் அவசரநிலையில் அனுமதிக்கப்படுவதில் 1.5% நிகழ்வுகள்; நீரிழிவு-எதிர்ப்பு மருந்துகள், இரத்த உறைவு-எதிர்ப்பு மருந்துகள் போன்ற மருந்துகள் சம்மந்தப்பட்டதாய் இருக்கிறது.
மேற்கோள்-ஜார்னல் வாட்ச் ஹாஸ்பிடல் மெடிசின். நவம்பர் 23 2011.

2010-ன் முக்கிய மருத்துவத் தகவல்கள்
மாசுபட்ட குடிநீரை குடிப்பதன் மூலம் ஏற்படும் பேதிக்கு/கேஸ்ட்ரோஎன்டரிட்டிஸ் பிந்தைய நீண்டகால உடல்நலப் பிரச்சனை.   அருகில் இருப்பவர் மூலமான இதய சுவாசமூட்டல் (CPR).

ஈ-கோலி-யின் காரணமான கடுமையான பேதி/கேஸ்ட்ரோஎன்டரிட்டிஸ், உயர் இரத்த அழுத்தம், இதய மற்றும் சிறுநீரக பிரச்சனைகள் போன்றவற்றிற்கான நீண்டகால அபாயத்தை அதிகரிப்பதுடன் சம்மந்தப்பட்டது என BMJ ஆய்வு தெரிவிக்கிறது. கனடாவில், ஏறத்தாழ 2000 வயதுவந்தோர், இரைப்பைக் குடலழற்சி நிகழ்ந்த பிறகு 8 வருடங்களுக்கு பின்தொடரப்பட்டனர். ஈ-கோலி நஞ்சானது, நீண்டகால வெளிப்பாட்டை தெரிவிக்கக்கூடிய வகையில் சிறுநீரகத்தில் சாத்தியமான ஏற்பிகளை கொண்டுள்ளது.
மேற்கோள் - BMJ-2010;341;C020.

தன்னந்தனியான மார்பு அழுத்தம் கூட, செயற்கை சுவாசமூட்டலுடன் கூடிய CPR-ஐப் போன்றே சிறந்தது. செயற்கை சுவாசமூட்டல் தேவைப்படாத காரணத்தால், எந்த கவலையும் இல்லாமல் மார்பு அழுத்தத்தை மேற்கொள்வதற்கு இது அருகில் நிற்பவரை ஊக்குவிக்கும். மார்பு அழுத்தம் மேற்கொள்வதனால் மட்டுமே, ஏராளமான உயிர்களை காப்பற்றமுடியும்.
மேற்கோள் - NEJM-2010-ஜூலை

சிறுநீரக நரம்பெடுப்பானது, கட்டுப்படுத்தப்படாத உயர் இரத்த அழுத்தத்தில், இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.   அரிசி சாதம் எடுத்துக்கொள்தல், நீரிழிவு நோய் உருவாவதற்கான அபாயத்திற்குரியது.

வடிகுழாய் சார்ந்த சிறுநீரக நரம்பிப்பெடுப்பானது (நரம்பு வழங்கலை அகற்றுதல்), கட்டுப்படுத்தப்படாத உயர் இரத்த அழுத்தத்தில், இரத்த அழுத்தத்தை மிகப்பெரிய அளவில் குறைக்கிறது. இது, 3 மருந்துகளை எடுத்துக்கொண்ட போதிலும் மோசமான இரத்த அழுத்தக் கட்டுப்பாட்டை (160/100-க்கும் அதிகம்) கொண்டிருந்த 100 நோயாளிகளிடத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

மேற்கோள் - தி லேன்ஸெட் - தொகுதி 376, பதிப்பு 9756, டிசம்பர்-2010.
 

வெள்ளை அரிசிக்கு பதிலாக தீட்டாத அரிசியை மாற்றி உபயோகித்தலானது, நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.
மேற்கோள் –Archives of Internal medicine.2010 - ஜூன்

ஏறத்தாழ குடற்புற்றின் கால் பங்கை, வாழ்க்கைப்பாணி மாற்றங்களால் தவிர்க்கமுடியும்.   பூச்சிக்கொல்லிகளும் கவனக்குறைவு/மிகை இயக்கக் குறைபாடும்.

எளிய வாழ்க்கைப்பாணி மாற்றங்களை செய்வதானது, பெருங்குடல்–மலக்குடல் புற்றின் அபாயங்களை குறைக்கிறது. நடுத்தர வயதுடைய 55,000 டானிஷ்கள் 10 வருட காலத்திற்கு ஆய்வு செய்யப்பட்டார்கள் என BMJ ஆய்வு தெரிவிக்கிறது. பரிந்துரைக்கப்பட்ட வாழ்க்கைப்பாணி மாற்றங்களாவன :- புகை பிடிக்காதிருத்தல், தினமும் குறைந்தது 30 நிமிட நேரத்திற்காவது உடற்பயிற்சி செய்தல், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுதல், ஆண்களுக்கு 40 அங்குலத்தை விட குறைவாகவும் பெண்களுக்கு 35 அங்குலத்தை விட குறைவாகவும் இடை சுற்றளவை பராமரித்தல்.
மேற்கோள்: BMJ-2010; 341; C5504.

 

உணவிலும் குடிநீரிலும் அடிப்படையாய் காணப்படுகின்ற ஆர்கனோபாஸ்பரஸ் பூச்சிக்கொல்லிகளுக்கு குழந்தைகள் வெளிப்படுத்தப்படுகிறார்கள். இந்த பூச்சிக்கொல்லிகள், மூளை வளர்ச்சிக்கு மிகவும் தீங்கிழைப்பவை. 1138 குழந்தைகளிடம் நடத்தப்படும் ஆய்வு ஒன்று, கவனக்குறைவு/மிகை இயக்கக் குறைபாட்டிற்கும் பூச்சிக்கொல்லிக்கு ஆளாவதற்கும் இடையிலான சாத்தியமான தொடர்பை காட்டுகிறது.
மேற்கோள்: Pediatrics. ஜூன்-2010.

நடுத்தர வயதுடைய பெண்களின் உடல் எடை அதிகரிப்பதை தடுப்பதற்கு எந்தளவு உடற்பயிற்சி செய்யவேண்டியுள்ளது?   சிறுநீரக தானம் பாதுகாப்பானது.

34,000 பெண்களிடத்தில் ஆய்வு செய்யப்பட்டதில், உடல் எடை அதிகரிப்பதை கட்டுப்படுத்துவதற்கு 1 மணிநேர மிதமான உடற்பயிற்சி தேவைப்படுகிறது என கண்டறியப்பட்டது.
மேற்கோள்: JAMA – 2010.

 

80,000 உயிருள்ள கொடையாளிகள், 10-க்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஆய்வு செய்யப்பட்டு, ஆரோக்கிய கட்டுப்பாடுகளுடன் ஒப்பிடப்பட்டனர். நீண்ட கால இறப்பிலோ சிக்கல் விகிதத்திலோ வித்தியாசம் எதுவும் காணப்படவில்லை.
மேற்கோள்: JAMA. மார்ச்-2010.

குழாய் மூலம் புகை மற்றும் சிகரெட் பிடித்தல் – இவை சிறந்தவையா?   உப்பை குறைப்பதன் மக்கள் தொகை சார்ந்த பலன்.

புகையிலையை எடுத்துக்கொள்வதில் பாதுகாப்பான அளவு என எதுவும் கிடையாது. எவ்வடிவத்திலானாலும் இது அபாயகரமானது. குழாய் மூலம் புகை பிடித்தல், சிகரெட் பிடித்தல் என இரண்டுமே நுரையீரல் செயல்பாட்டுக் குறையை விளைவிக்கலாம்.
மேற்கோள்:Annals of internal medicine, பிப்ரவரி-2010.

 

தினமும் 3 கிராம் குறைவாக உப்பை எடுத்துக்கொள்வதால், வருடாந்திர இதயசம்மந்தமான அபாயத்தையும் பக்கவாதங்களையும் குறைக்கமுடியும். இதனால் 60,000 முதல் 1,20,000 வரையிலான மாரடைப்பு நிகழ்வுகளையும், 32,000 முதல் 62,000 வரையிலான பக்கவாத நிகழ்வுகளையும், 40,000 முதல் 90,000 வரையிலான இறப்புகளையும் தடுக்கமுடியும். இது, அமெரிக்க மக்கள் தொகையில் கணக்கிடப்பட்டுள்ளது. 1 கிராம் அளவு உப்பை குறைத்து எடுத்துக்கொள்வதும் கூட, 15,000 முதல் 32,000 வரையிலான இறப்புகளை தடுக்கமுடியும்.
மேற்கோள்: NEJEM. ஜனவரி-2010.

2009-ன் முக்கிய மருத்துவத் தகவல்கள்
இரத்த அழுத்தத்தை குறைக்கும் மருந்துகள் மற்றும் இதய நோயையும் பக்கவாதங்களையும் தடுத்தல்.   வயது வந்தோரின் குறைவான தூக்கம், உயர் இரத்த அழுத்தத்தை விளைவிக்கிறது.

எந்தவொரு மருந்துக் குழுவுடனும் 10மிமீ இதயச்சுருக்க மற்றும் 5மிமீ இதய விரிவு இரத்த அழுத்தத்தைக் குறைப்பதானது, 22% மற்றும் 41% எனும் அளவில் மாரடைப்புகள் மற்றும் பக்கவாதங்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. இது, யூகே-வில் 4,64,000 நோயாளிகளை உள்ளடக்கிய 147 வரிசைமுறையற்ற ஆய்வுகளின் பிறழ் பிரிப்பில் வெளிப்படுத்தப்பட்டது.
மேற்கோள் - BMJ, மே-2009.

நன்கு தெரிந்த உண்மையாக தெரிந்தாலும், இப்போது தான் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்: Archives of Internal Medicine

தலையிடுவதன் காரணமாக பலனடையக்கூடிய, நீரிழிவின் அபாயத்திலுள்ள மக்களை அடையாளம் காண்பதற்கான இடர் மதிப்பெண்கள்   ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் (வைட்டமின்–c, வைட்டமின்-e), உடற்பயிற்சியின் விளைவை மழுங்கடிக்கிறது.

நீரிழிவு நோயின் குடும்ப வரலாறு, உயர் இரத்த அழுத்தம், 55 வயதைத் தாண்டிய முதியோர், கருப்பினம், புகைபிடிப்பவர், அதிக இடை சுற்றளவு, உயரம் குறைவு, அதிவிரைவில் தளரும் நாடித்துடிப்பு, மற்றும் அதிக உடல் எடை.

மேலே கூறப்பட்டுள்ள மதிப்புகளைக் கொண்டுள்ள மக்கள், அடுத்த 10 ஆண்டுகளில் நீரிழிவு நோய் உருவாவதற்கான 50% வாய்ப்பைக் கொண்டிருக்கிறார்கள்.
மேற்கோள் – Annals of internal medicine – ஜூன்-2009.

 

வழக்கமான உடற்பயிற்சியானது, இன்சுலின் கூறுணர்வை அதிகரிப்பதுடன், நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கிறது. எதிர் ஆக்சிகரணி குறை நிரப்பிகள் கொடுக்கப்படும் பட்சத்தில் (வைட்டமின்–c, வைட்டமின்-e), அது உடற்பயிற்சியின் விளைவை மழுங்கடிக்கிறது. அதேசமயம், பழங்களும் காய்கறிகளும் நிரம்பிய உணவுமுறையானது, நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
மேற்கோள் –Proc Nata Aca Sci – யூஎஸ்ஏ மே 2009.

இறப்பு விகிதத்தை குறைக்கின்ற (ஆயுட்கால அதிகரிப்பு) மத்திய தரைப் பகுதி உணவுமுறையின் கூறுகள்   குழந்தைப்பருவத்தில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பது, ஆஸ்துமா நிகழ்வதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
  1. இறைச்சியை குறைவாக எடுத்துக்கொள்தல்
  2. காய்கறிகள், பழங்கள், பருப்புவகை தானியங்கள், கொட்டைகள், ஒற்றைப்படி நிறைவுறு கொழுப்புகள் (ஆலிவ் எண்ணெய்) போன்றவற்றை அதிகளவு எடுத்துக்கொள்தல்
  3. மதுவை மிதமாக எடுத்துக்கொள்தல்.
மேற்கோள் – BMJ, ஜூன்-2009.
 

நாளொன்றுக்கு 2 மணிநேரத்திற்கும் மேலாக தொலைக்காட்சி பார்க்கின்ற இளம் குழந்தைகள், மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடும் போது ஆஸ்துமா ஏற்படுவதற்கான இரு மடங்கு வாய்ப்பை கொண்டிருந்தனர்.
மேற்கோள்: Thorax Pediatric மார்ச் 2009

சிகப்பு ஈஸ்ட் அரிசியின் பலன்   மிதமான மது உட்கொள்ளலானது, பெண்களிடத்தில் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கச் செய்கிறது.

ஸ்டாட்டின்களை (கொலாஸ்ட்ராலைக் குறைக்கும் மருந்துகள்) ஏற்றுக்கொள்ள முடியாத நோயாளிகளுக்கான சிகிச்சைத் தெரிவு – கொலாஸ்ட்ராலைக் குறைக்கின்ற, இயற்கையாக நிகழ்கின்ற லோவாஸ்டாட்டினை உள்ளடக்கிய சிகப்பு அரிசி.
மேற்கோள் – Annals of internal medicine – ஜூன்-2009.

 

புற்றுநோயின் நோக்கு நிலையில் பார்க்கும் போது மதுவின் எந்த அளவுமே பெண்களுக்கு பாதுகாப்பானதல்ல. குறைவானது முதல் மிதமானது வரையிலான உட்கொள்ளலும் கூட, பல்வேறு வகையான புற்றுநோய்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதுடன் சம்மந்தப்படுகிறது.
மேற்கோள் –Journal of National Cancer institute – பிப்ரவரி 2009.

     
இங்கே விளம்பரப்படுத்தவும்..