முகப்புப்பக்கம் | எங்களை தொடர்புகொள்ள | உயர் இரத்த அழுத்தம் உள்ள‌ மக்கள் | நீரிழிவு நோய் உள்ள மக்கள்
உங்களுடைய சிறுநீரகத்தை காப்பாற்றுவதற்கான இயக்கம்  
டாக்டர். ராஜன் ரவிச்சந்திரன் புகழ்பெற்ற சிறுநீரக மருத்துவர்
டாக்டர். ராஜன் ரவிச்சந்திரன்

கூறுகிறார் "நீரிழிவு நோயும் (டயாபிடிஸ்) உயர் இரத்த அழுத்தமும் (ஹைபர்டென்ஷன்), உங்களுக்கு நாட்பட்ட சிறுநீரக நோய் (CKD) ஏற்படுவதற்கு வழிவகுக்கலாம்" >>
முகப்புப்பக்கம் > உப்பு சத்தியாகிரகம்
உப்பு மற்றும் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தத்திற்கான மிகவும் பொதுவான காரணம், சாதாரண உப்பு. பெரும்பாலான மக்களுக்கு, உப்பு சார்ந்த இரத்த அழுத்தமே உள்ளது. இந்திய உணவுமுறையில் எடுத்துக்கொள்ளப்படுகின்ற உப்பின் அளவு நாளொன்றுக்கு 15 கிராம்கள். துரதிர்ஷ்டவசமாய், பண்ணைகளில் வசிப்பதை விட காற்று குளிரூட்டப்பட்ட சூழ்நிலையையிலேயே தற்போது நாம் வசிப்பதால், இந்த உப்பு உட்கொள்ளலானது உயர் இரத்த அழுத்தத்தை விளைவிக்கிறது. அமெரிக்கர்கள் உப்பை எடுத்துக்கொள்ளும் அளவு, நாளொன்றுக்கு பெண்களுக்கு 7 கிராமாகவும் ஆண்களுக்கு 10 கிராமாகவும் உள்ளது. உணவுமுறையில் 1/3 பங்கு அளவிற்கு உப்பை குறைத்தால், மாரடைப்புகளையும் பக்கவாதங்களையும் 30% அளவிற்கு குறைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது. சராசரி அமெரிக்கர்கள் உப்பு எடுத்துக்கொள்ளும் அளவை 1/3 பங்கு குறைத்தால், உடல்நலப் பராமரிப்பில் தன்னால் 25 பில்லியன் டாலர்களை சேமிக்கமுடியும் என அமெரிக்கா கணக்கிட்டுள்ளது. ஜப்பான், சீனா உட்பட உலகெங்கிலும் உப்பை குறைவாக எடுத்துக்கொள்வதற்கான தீவிர பிராச்சாரங்கள் நடைபெறுகின்றன.

7 மார்ச் 2010 அன்று அதிகாலை நேரத்தில், சென்னையிலுள்ள மெரினா கடற்கரையில், டாக்டர். ராஜன் ரவிச்சந்திரன் அவர்களின் தலைமையின் கீழ் நடைப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. புகழ்பெற்ற நாடக ஆசிரியரும் நகைச்சுவை நடிகருமான கிரேஸி மோகன், யூஎஸ் கன்ஸல் ஜெனரல் ஆன்ரு டி. சிம்கின் ஆகியோரும் இதில் பங்கேற்றனர். உப்பு குறைப்பு பிராச்சாரத்தை ஆதரிப்பதற்காக நடைப்பேரணியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


நடைப்பேரணி, சென்னை.

11 ஏப்ரல் 2010 (ஞாயிற்றுக்கிழமை) காலையில், புதுச்சேரியில் ECH ஒத்துழைப்புடன் sugarbp.org-யால் நடைப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. உப்பு குறைப்பு பிராச்சாரத்தை ஆதரிப்பதற்காக நடைப்பேரணியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


நடைப்பேரணி, புதுச்சேரி.

உணவுகளில் அதிகளவு உப்பு சேர்த்துக்கொள்வது தொடர்பான அபாயங்கள் குறித்து மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, 6 ஜூன் 2010 அன்று திருச்சிராப்பள்ளி (திருச்சி)-யில் பேரணி நடத்தப்பட்டது. சென்னை-சார்ந்த பாலாஜி மருத்துவ மற்றும் கல்வி அமைப்பு/sugarbp.org மற்றும் திருச்சி-சார்ந்த புகழ்பெற்ற சிறுநீரக மருத்துவ ஆலோசகர் டாக்டர். பி. கிரி ஆகியோருடன் கூட்டாக ஏற்பாடுசெய்யப்பட்டது. சிஎஸ்ஐ-மெதொடிஸ்ட் பள்ளியில் தொடங்கி ஐஎம்ஏ ஹாலில் உச்சமடைந்த இப்பேரணியில், மாணவர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


நடைப்பேரணி, திருச்சிராப்பள்ளி (திருச்சி).



இங்கே விளம்பரப்படுத்தவும்..