புகழ்பெற்ற சிறுநீரக மருத்துவர்
டாக்டர். ராஜன் ரவிச்சந்திரன்
கூறுகிறார் "நீரிழிவு நோயும் (டயாபிடிஸ்) உயர் இரத்த
அழுத்தமும் (ஹைபர்டென்ஷன்), உங்களுக்கு நாட்பட்ட
சிறுநீரக நோய் (CKD) ஏற்படுவதற்கு வழிவகுக்கலாம்" >>
சிறுநீரக நுண்குழாய்கள் பாதிப்படையும் போது, சிறுநீரில்
புரதம்/ஆல்புமின் கசிகிறது. சிறுநீர் சார்ந்த புரத இழப்பை தோராயமாக
கணக்கிடுவதன் மூலம் 80%-க்கும் மேலான சிறுநீரக நோய்களை கண்டறியலாம்.
குளோமெருர் நுண்வடிப்பு விகிதத்தை (GFR) கணக்கிடுவதன் மூலமும் சிறுநீரக
செயல்பாட்டை மதிப்பிடலாம். இரத்தத்தில் கிரேட்டினினை மதிப்பிடுவதன் மூலமும்
நிலையான சூத்திரங்களை உபயோகித்தும் இது மேற்கொள்ளப்படுகிறது.
துரதிர்ஷ்டவசமாய், இரத்த கிரேட்டினின் மதிப்பீடானது, அனைத்து ஆய்வகங்களிலும்
சீராக வரையளவுப்படுத்தப்படுவதில்லை என்பதால் இது நம்பகமானதாக இருக்காது.
சிறுநீரில் புரத்தத்தை எப்படி
கண்டறிவது?
ஸ்ட்ரிப் ஒன்றை உபயோகித்து, அதை சிறுநீரில் அமிழ்த்துவதே மிக எளிய வழி.
ஆல்புமின் / புரத இழப்பானது, 1+, 2+, 3+ என நிற மாற்ற அடையாளத்தை பார்ப்பதன் மூலம்
அளவறியப்படுகிறது. (கீழே படங்களில் காட்டியுள்ளது போல)
புரதம், கிரேட்டினின் ஆகியவற்றிற்க்கான சிறுநீரில் தோராய மதிப்பீடு.
வழக்கமான விகிதம், 0.2 (<0.2) க்கும் குறைவு.
சிறுநீர் சார்ந்த நுண் ஆல்புமினின் தோராய மதிப்பீடு. சிறுநீர் ஆல்புனினின்
வழக்கமான மதிப்பு, நாளொன்றுக்கு 30 மிகி. நாளொன்றுக்கு 30 முதல் 300 மிகி வரை
இருப்பது மைக்ரோஆல்புமினூரியா. நாளொன்றுக்கு 300 மிகி-க்கும் அதிகமாக இருப்பது
மேக்ரோ ஆல்புமினூரியா என அழைக்கப்படுகிறது. இதுவும் சிறுநீர் சார்ந்த கிரேட்டினின்
தோராய மதிப்பீட்டுடன் தொடர்புள்ளதாய் இருக்கலாம். வழக்கமான மதிப்புகள் - ஆல்புமின்
/கிரேட்டினின் விகிதமானது, ஆண்களிடத்தில் 17 மிகி / கிராம் க்கும் குறைவு,
பெண்களிடத்தில் 25 மிகி / கிராம் க்கும் குறைவு.
24 மணிநேர சிறுநீர் சார் புரத தோராய மதிப்பீடு - இதுவே மிகத்துல்லியமான
நிலை. வழக்கமான வெளியேற்றமானது, நாளொன்றுக்கு 150 மிகி-க்கும் குறைவு.
கிராமங்களில், சிறுநீரில் சல்ஃபோசலிசைலிக் அமிலத்தை சேர்த்து
மேற்கொள்ளப்படுகின்ற வெப்ப சோதனையின் மூலம் சிறுநீர் புரதத்தை சோதிப்பது
சாத்தியமானது.
சிறுநீரக நோயை கண்டறிவதற்கான மற்ற அடிப்படை சோதனைகள்
இரத்த யூரியா மற்றும் கிரேட்டினின் தோராய
மதிப்பீடுகள் இது, உண்ணாநிலையில் இல்லாமல்
மேற்கொள்ளப்படுகின்ற இரத்த பரிசோதனை. வழக்கமான இரத்த யூரியா அளவானது 20 முதல்
50 மிகி % வரை மாறுபடுகிறது. வழக்கமான இரத்த கிரேட்டினின் மதிப்புகளானது 0.6
முதல் 1 மிகி % வரை மாறுபடுகிறது. மதிப்புகள் யாவும் ஒன்றாகவும் ஆய்வக ஒப்பு
அளவிற்கு ஏற்பவும் பொருள்கொள்ளப்படவேண்டும். சில சூத்திரங்களை உபயோகித்தும்
இரத்த கிரேட்டினினில் இருந்து சிறுநீரக செயல்பாட்டின் சதவிகிதத்தை தோராயமாக
மதிப்பிடலாம்.
சிறுநீரக அல்ட்ராசவுண்ட் இமேஜிங்
இது, சிறுநீரகங்களின் அளவையும், சிறுநீரகங்களில் தடை ஏதும் உள்ளதா என்பதையும்,
சிறுநீரகங்களில் கட்டி அல்லது கற்கள் ஏதும் இருக்கிறதா என்பதையும் வெளிப்படுத்த
முடிகின்ற ஓர் மிக எளிய ஊடுறுவா பரிசோதனை. அல்ட்ராசவுண்ட் மூலமான மிகச்சிறிய
கற்களை பொருள்கொள்ளும்போது அதிக கவனம் செலுத்தவேண்டியுள்ளது.